.webp)
Colombo (News 1st) ஹுங்கம வாடிகல - ரன்ன பகுதியில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
'அந்துபலானே பிந்து' எனும் நபர் உள்ளிட்ட நால்வரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபர் பல்வேறு கொலைச் சம்பவங்கள் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டவர் என பொலிஸார் குறிப்பிட்டனர்.
சந்தேகநபர்களிடமிருந்து துப்பாக்கி மற்றும் கூரிய ஆயுதம் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
ஹுங்கம வாடிகல - ரன்ன பகுதியிலுள்ள வீடொன்றில் ஆணொருவரும் பெண்ணொருவரும் இன்று(07) அதிகாலை வெட்டிக் கொலை செய்யப்பட்டிருந்தனர்.
போ பசிந்து என்ற பெயரில் அழைக்கப்படும் பசிந்து ஹேஷான் என்ற நபரே கொலை செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்த பெண் அவருடன் நெருங்கிய தொடர்பை பேணியவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
அவர்கள் ரன்ன பகுதியிலுள்ள வீடொன்றில் தற்காலிகமாக வசித்து வந்துள்ளனர்.
கொலை செய்யப்பட்ட போ பசிந்து என்ற நபரின் மீது போதைப்பொருள் உள்ளிட்ட பல்வேறு குற்றங்கள் தொடர்பில் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதுடன், குற்றவியல் வழக்கு தொடர்பில் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டு பிணை வழங்கப்பட்டவரென பொலிஸார் தெரிவித்தனர்.
முகத்தை மறைத்துக் கொண்டுவந்த ஐவர், அவர்கள் வசித்துவந்த வீட்டிற்குள் புகுந்து கூரிய ஆயுதங்களால் தாக்கி கொலை செய்துள்ளனர்.
கொலை செய்யப்பட்ட போ பசிந்து மற்றும் அவருடன் நெருங்கிய தொடர்பைப் பேணிய பெண் ஆகியோர் 28 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் 02 பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.