.webp)
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தங்காலை பிராந்திய குற்ற விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
பெலிஅத்தே சனா என்பவர் தொடர்பில் வௌியிட்ட கருத்து குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்காக இன்று(06) காலை 10 மணிக்கு வருகைதருமாறு விமல் வீரவன்சவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தங்காலையில் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் படகுடன் கைது செய்யப்பட்ட பெலிஅத்தே சனா என்பவர் தற்போது தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் தடுத்துவைத்து விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.