.webp)
Colombo (News 1st) யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பொன்விழா நிகழ்வுகள் இன்று(06) இடம்பெற்றன.
யாழ். பல்கலைக்கழகத்தின் 50ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு 12 பீடங்களும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்வு பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் இடம்பெற்றது.
நிகழ்வில் இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர், சிரேஷ்ட பேராசிரியர் கபில செனிவிரத்ன, வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், யாழ். இந்திய துணை தூதுவர், இலங்கையின் அனைத்து பல்கலைக்கழகங்களின் பீடாதிபதிகள், யாழ். பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
யாழ். பல்கலைக்கழகத்தின் 50 வருட கால கல்விப்பணி வரலாற்றை எடுத்துயம்பும் வகையில் அமைந்த 'யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பொன்அகவை வரலாறு' எனும் நூல் வெளியிடப்பட்டது.