கம்பளையில் காரில் மோதுண்டு 3 பெண்கள் உயிரிழப்பு

by Staff Writer 06-10-2025 | 5:56 PM

Colombo (News 1st) கம்பளை - தொலுவ பிம்பாராம விகாரைக்கு முன்னால் காரில் மோதுண்டு 03 பெண்கள் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொரு பெண் காயமடைந்துள்ளார்.

வழிபாட்டிற்காக வந்திருந்த பெண்களே இவ்வாறு விபத்தை எதிர்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விகாரையில் இருந்து மலசலகூடத்திற்கு செல்வதற்காக வீதியின் மறுபக்கத்திற்கு செல்ல முற்பட்ட போது விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த கார் பெண்கள் மீது மோதி, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியிலும் மோதுண்டு பின்னர் மதிலுடன் மோதியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

70, 67 வயதுகளை கொண்ட மூவரே விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

காயமடைந்த 56 வயதான பெண் கம்பளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

காரை செலுத்திய பெண்ணும் காயமடைந்து கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.