கத்திக்குத்து தாக்குதலில் கடை உரிமையாளர் பலி

யாழ். ஏழாலையில் கத்திக்குத்து தாக்குதலில் கடை உரிமையாளர் உயிரிழப்பு

by Staff Writer 05-10-2025 | 7:39 AM

Colombo (News 1st) யாழ்ப்பாணம் - சுன்னாகம் ஏழாலை பகுதியில் நேற்றிரவு(04) இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கடையொன்றில் பலவந்தமாக பொருட்களை தருமாறு கோரி முரண்பாட்டில் ஈடுபட்ட இருவர் கடையின் உரிமையாளரை கத்தியால் தாக்கியுள்ளனர்.

இதன்போது பலத்த காயமடைந்த 35 வயதுடைய கடை உரிமையாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

சந்தேகநபர்கள் இருவரும் மதுபோதையில் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுளளது.

ஏழாலை பகுதியைச் சேர்ந்த சந்தேகநபரகள் கைது செய்யப்பட்டு பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.