.webp)
Colombo (News 1st) கதிர்காமம், வெஹெரகல நீர்த்தேக்கத்தை அண்மித்த யால சரணாலயத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர்(STF) விசேட சோதனைகளை முன்னெடுத்துள்ளனர்.
அண்மையில் வெஹெரலகல வாவியிலிருந்து மெகசின் உள்ளிட்ட ஆயுதங்கள் மீட்கப்பட்டதையடுத்து முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கமைவாக குறித்த விசேட சோதனைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
வெஹெரகல்ல வாவியிலிருந்து 215 T-56 ரக வெற்று மெகசின்கள், 38 LMG ட்ரம் வெற்று மெகசின்கள், 06 T-81 மெகசின்கள் உள்ளிட்ட ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
குறித்த ஆயுதங்கள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வெல்லவாய நீதிவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.