.webp)
சாரதி அனுமதிபத்திரங்களின் செல்லுபடியாகும் காலத்தை நீடிப்பதற்கு மோட்டார் வாகனப் போக்குவரத்து திணைக்களம் தீர்மானித்துள்ளது.
நீடிக்கப்படவுள்ள கால எல்லை தொடர்பில் ஆராய்வதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க தெரிவித்தார்.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அமைச்சு மற்றும் மோட்டார் வாகனப் போக்குவரத்து திணைக்களத்தின் தொழில்நுட்ப அதிகாரிகள் இந்த குழுவில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கையொன்றை வழங்குமாறு குறித்த குழுவிற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கூறினார்.
அதனை தொடரந்து போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அமைச்சார் பிமல் ரத்நாயக்க உள்ளிட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடி, அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன.
தற்போது இலகுரக வாகனங்களுக்கான சாரதி அனுமதிபத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் 8 வருடங்களாகவும் கனரக வாகனங்களுக்கான சாரதி அனுமதிபத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் 4 வருடங்களாகவும் காணப்படுகின்றது.
இந்த செல்லுபடியாகும் காலம் குறிப்பிடத்தக்க அளவு நீடிக்கப்படவுள்ளது.