.webp)
கடந்த 9 மாதங்களில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் 1,248 கிலோகிராம் ஹெரோயின் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவிப்பொலிஸ் அத்தியட்சகருமான மினுர செனரத் தெரிவிக்கிறார்.
இந்த காலப்பகுதியில் 1,852 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளும், கஞ்சா 14,221 கிலோகிராமும், கொக்கெய்ன் 29 கிலோகிராமும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, போதைப் பொருள் தொடர்பிலான தகவல்களை வழங்க பொலிஸ் தொடர்பாடல் கட்டமைப்பு மேலும் விஸ்தரிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஹெரோயின், ஐஸ், கொக்கெய்ன், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் பரவல் குறித்து பொதுமக்களுக்கு நேரடியாக தகவல்களை வழங்குவதற்காக மாகாணங்களுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர்களின் தொலைபேசி இலக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிக்க பொதுமக்கள் வழங்கும் ஆதரவுக்கு பாராட்டு தெரிவிக்கும் பொலிஸார் குறித்த தகவல்களின் இரகசியத்தன்மை பாதுகாக்கப்படும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.