அரச ஊழியர் சம்பள முரண்பாடுகளை தீர்க்க நடவடிக்கை

அரச ஊழியர்களின் சம்பள முரண்பாடுகளை தீர்க்க நடவடிக்கை​

by Staff Writer 04-10-2025 | 3:53 PM

அரச ஊழியர்களின் சம்பள முரண்பாடுகளை தீர்க்க இம்முறை வரவு-செலவு திட்டத்தில் கவனம் செலுத்தப்படுமென பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

அரச ஊழியர்களுக்கு கடந்த வரவு-செலவு திட்டத்தின் போது அதிகரிக்கப்பட்ட சம்பளத்தின் மற்றுமொரு பகுதியை இம்முறை வரவு-செலவு திட்டத்தில் பெற்றுக்கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் சந்தன அபேரத்ன குறிப்பிட்டார்.

அரச ஊழியர்கள் மத்தியில் காணப்படும் சம்பள முரண்பாடுகளை தீர்ப்பதற்கு தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்படுமெனவும்  அமைச்சர் மேலும் கூறினார்.