.webp)
மன்னார் - பேசாலையில் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டு சிறைக்கூடத்தில் தடுத்து வைக்கப்பட்ட சந்தேகநபர் திடீர் சுகவீனமடைந்து உயிரிழந்துள்ளார்.
வவுனியா - கூமாங்குளம் பகுதியைச் சேர்ந்த 37 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் நேற்று(02) பிற்பகல் கைது செய்யப்பட்டு பேசாலை பொலிஸ் நிலையத்தின் முதலாம் சிறை கூடத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இதன்போது சந்தேகநபருக்கு ஏற்பட்ட திடீர் சுகவீனத்தையடுத்து அவர் உயிரிழந்ததாக பொலிஸார் கூறினர்.
சம்பவ இடத்தை இன்று(03) மதியம் மன்னார் பதில் நீதவான் பார்வையிட்டார்.
இதனையடுத்து சடலம் பேசாலை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
சடலம் மீதான பிரேத பரிசோதனை நாளை(04) இடம்பெறவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பேசாலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.