.webp)
Colombo (News 1st) Shopping Bag போன்ற பொலித்தீன் பைகளை இலவசமாக வழங்க முடியாத வகையிலான நியமங்களை அறிவித்து அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.
நுகர்வோர் விவகார அதிகார சபையின் தவிசாளர் ஹேமந்த சமரகோனால் இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
அடர்த்தி குறைந்த பொலித்தீன், அடர்த்தி குறைந்த நேர்த்தியான பொலித்தீன் ஆகியவற்றில் உற்பத்தி பொருட்களை இலவசமாக வழங்க முடியாதென அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த ஷொப்பிங் பைக்கான விலை வியாபார நிலையத்தில் காட்சிப்படுத்தப்பட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் நுவர்வோருக்கு ஷொப்பிங் பைகளை வழங்குவதை இடைநிறுத்தி இந்த அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.