.webp)
Colombo (News 1st) தங்காலை சீனிமோதரை மற்றும் கொடவெல்ல பகுதியில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொகையை நாட்டிற்கு கொண்டுவந்ததாகக் கூறப்படும் படகுடன் சந்கேநபர் பாதுகாப்பு பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவினர் இணைந்து தெவுந்தர கடற்பரப்பில் முன்னெடுத்த ரோந்து நடவடிக்கையின் போது படகு கைப்பற்றப்பட்டுள்ளது.
சுமார் 10 பில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயின் மற்றும் 705 கிலோ 170 கிராம் ஐஸ் போதைப்பொருள் ஆகியன கடந்த 22ஆம் திகதி தங்காலை சீனிமோதரை மற்றும் கொடவெல்ல பகுதிகளில் கைப்பற்றப்பட்டிருந்தது.
தங்காலை சீனிமோதரை பகுதியில் வீடொன்றிலிருந்து இருவரின் சடலங்கள் மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து குறித்த போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டிருந்தன.
குறித்த போதைப்பொருள் வௌிநாட்டில் தலைமறைவாக உள்ள திட்டமிட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய குற்றவாளியான உனாகுருவே ஷாந்தவிற்கு சொந்தமானதென பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் தகவல்கள் வௌிகொணரப்பட்டுள்ளன.
இந்த போதைப்பொருள் ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தானிலிருந்து கடல்மார்க்கமாக தெற்கு கடற்கரை பகுதிக்கு கொண்டுவரப்பட்டு அங்கிருந்து விநியோகிக்கப்பட்டுள்ளதாக விசாரணை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் இதுவரை 06 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.