நியூஸிலாந்துடனான போட்டியில் அவுஸ்திரேலியா வெற்றி

மகளிருக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் நியூஸிலாந்துக்கு எதிரான போட்டியில் அவுஸ்திரேலியா வெற்றி

by Staff Writer 01-10-2025 | 10:34 PM

Colombo (News 1st) 2025

மகளிருக்கான உலகக் கிண்ண கிரிக்கெட்

தொடரின் நியூஸிலாந்து அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் அவுஸ்திரேலியா 89 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

அஹமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் போட்டி நடைபெறுகின்றது.

போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா சார்பில் Alyssa Healy, Phoebe Litchfield ஆகியோர் ஆரம்ப வீரர்களாக களமிறஙகினார்.

இருவரும் முதல் விக்கெட்டுக்காக 40 ஓட்டங்களைப் பெற்றனர்.

Alyssa Healy 19 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்ததுடன் Phoebe Litchfield 45 ஓட்டங்களைப் பெற்றார்.

Ashleigh Gardner  ஒரு சிக்ஸர், 16 பௌண்டரிகள் அடங்கலாக108 ஓட்டங்களை பெற்றார்.

அவுஸ்திரேலியாவின் முதல் 3 விக்கெட்களும் 108 ஓட்டங்களுக்குள் வீழ்த்தப்பட்டன.

பந்துவீச்சில் Jess Kerr, Lea Tahuhu ஆகியோர் தலா 03 விக்கெட்களை வீழ்த்தினர்.

அவுஸ்திரேலியா 49.3 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்களையும் இழந்து 326 ஓட்டங்களைப் பெற்றது.

தொடரின் அனைத்து போட்டிகளையும் Tv1 தொலைக்காட்சி ஊடாகவும் sirasatv.lk இணையத்தளம் ஊடாகவும் நேரலையாக காண முடியும்.