.webp)
Colombo (News 1st) டீசல் விலை குறைக்கப்பட்ட போதிலும் பஸ் கட்டணம் குறைக்கப்பட மாட்டாதென தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பஸ் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டுமாயின், டீசல் விலை குறைந்தது 4 வீதத்தால் குறைக்கப்பட வேண்டுமெனவும் இம்முறை 1.58 வீதத்தால் விலை குறைக்கப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழுவின் தலைவர் பீ.ஏ.சந்திரபால தெரிவித்தார்.
ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் டீசல் விலை தலா 6 ரூபா வரை குறைக்கப்பட்டது.
டீசல் விலை 277 ரூபாவாகும்.