லலித், குகன் காணாமலாக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் மீள விசாரணை

by Staff Writer 29-09-2025 | 9:58 PM

Colombo (News 1st) லலித் மற்றும் குகன் ஆகியோர் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களம் மீண்டும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

அவர்களின் சகோதரிகளிடம் இன்று(29) வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களான லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகிய இருவரும் 2011 டிசம்பர் 9ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் வைத்து காணாமல் போனார்கள்.

பின்னர் மேற்கொண்ட விசாரணைகளுக்கு அமைய அதுவொரு கடத்தல் சம்பவம் என வௌிக்கொணரப்பட்டதுடன் விடயம் தொடர்பான நீதிமன்ற நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டன.

குறித்த நீதிமன்ற நடவடிக்கைகளின் போது சம்பவம் இடம்பெற்ற காலப் பகுதியில் பாதுகாப்பு செயலாளராக கடமையாற்றிய கோட்டாபய ராஜபக்ஸவிடம் சாட்சி விசாரணை மேற்கொள்ளப்படவிருந்தது.