புறக்கோட்டை தீ விபத்து தொடர்பில் ஆராய விசேட குழு

by Staff Writer 21-09-2025 | 8:54 AM

Colombo (News 1st) கொழும்பு புறக்கோட்டை முதலாம் குறுக்குத்தெருவில் கட்டடமொன்றில் பரவிய தீ 12 மணித்தியாலங்களுக்கு பின்னர் 
கட்டுப்பாடுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மின் உபகரண விற்பனை நிலையத்தின் நான்காவது மாடியில் நேற்று(20) மாலை தீ பரவல் ஏற்பட்டது.

இதன் பின்னர் அருகிலிருந்த மற்றுமொரு கட்டடத்திலும் தீ பரவியது.

பின்னர் 20 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் விமானப்படையின் பெல் 212 ரக ஹெலிகொப்டர், பொலிஸார், கடற்படையினர் மற்றும் துறைமுகத்தின் தீயணைப்பு பிரிவினர் உள்ளிட்டோர் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இந்த தீ விபத்து தொடர்பான விசாரணைகளுக்காக பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

தீ விபத்து இடம்பெற்ற பகுதிக்கு அரச இரசாயனப் பகுப்பாய்வாளர் மற்றும் நீதவான் ஆகியோர் செல்லவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனிடையே விசாரணை குழு நியமிக்கப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு பிரதியமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார்.

புறக்கோட்டையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கட்டடங்கள் தொடர்பிலும் இதன்போது விசேட கவனம் செலுத்தப்படும என பிரதியமைச்சர் நியூஸ் ஃபெஸ்ட்டுக்கு தெரிவித்தார்.

எதிர்வரும் 02ஆம் திகதி இடம்பெறவுள்ள மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இந்த விடயம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு பிரதியமைச்சர் சுனில் வட்டகல குறிப்பிட்டார். 

ஏனைய செய்திகள்