திடீரென தீப்பிடித்து எரிந்த முச்சக்கர வண்டி..

நடுவீதியில் திடீரென தீப்பிடித்து எரிந்த முச்சக்கர வண்டி

by Staff Writer 21-09-2025 | 4:51 PM
 
நாவலப்பிட்டியில் இருந்து ஹட்டன் நோக்கி சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டி கினிகத்ஹேனையில் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.
குறித்த சம்பவமானது நேற்று(20) மாலை இடம்பெற்றுள்ளது.
குறித்த முச்சக்கர வண்டியில் சாரதி உட்பட மூவர் பயணித்ததாகவும், எவருக்கும் காயம் ஏற்படவில்லை என எமது நியூஸ் ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பில் கினிகத்ஹேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏனைய செய்திகள்