.webp)
Colombo (News 1st) சமூகத்தில் போலி நாணயத்தாள் பாவனை உள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் கண்டறிந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் அத்தியட்சகர் F.W.வூட்லர் தெரிவித்தார்.
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 407 போலி நாணயத்தாள்கள் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
நேற்று(20) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனை கூறியுள்ளார்.