.webp)
Colombo (News 1st) கரந்தெனிய பிரதேச சபையின் தவிசாளர் மஹீல் ரங்கஜீவ முனசிங்க இன்று(21) காலை காலமானார்.
47 வயதான அவர் இன்று காலை உடற்பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது உயிரிழந்துள்ளார்.
அன்னார் அண்மையில் இடம்பெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கரந்தெனிய பிரதேச சபைக்காக தேசிய மக்கள் சார்பில் பொரகந்த வட்டாரத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று கரந்தெனிய பிரதேச சபையின் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.