இன்றும் சட்டப்படி வேலை தொழிற்சங்க போராட்டத்தில்..

மின்சார ஊழியர்கள் இன்றும் சட்டப்படி வேலை தொழிற்சங்க போராட்டத்தில்..

by Staff Writer 19-09-2025 | 4:49 PM

இலங்கை மின்சார சபை ஊழியர்கள் ஆரம்பித்த சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கை இன்றும் தொடர்கின்றது.

எதிரணி அரசியல் கட்சிகளுடன் தொடர்புடைய தொழிற்சங்கங்களுடன் இணைந்து பொறியியலாளர்கள் சங்கம் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் மறுசீரமைப்பின்போது தாம் பெற வேண்டிய சலுகைகளுக்கான நிபந்தனைகளை முன்வைத்து இந்த தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்துள்ளன.

அரசாங்கம் 21 ஆம் திகதிக்குள் தமது கோரிக்கைகளுக்கு உரிய பதில் வழங்காத பட்சத்தில் மறுசீரமைக்கப்பட்ட குழுக்களில் இருந்து தமது உறுப்பினர்கள் விலகுவார்கள் என ஶ்ரீலங்கா சுதந்திர ஊழியர் தொழிற்சங்கத்தின் பிரதம செயலாளர்  பிரபாத் பிரியந்த தெரிவித்துள்ளார்.

அண்மையில்  நிறைவேற்றப்பட்ட மின்சார சட்டத்தின்படி மறுசீரமைப்பு செயன்முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று(18) மற்றும் நேற்று முன்தினம்(17)  மின்சார சபை தொழிற்சங்கங்கள் சுகயீன விடுமுறை தொழிற்சங்க  போராட்டத்தில் ஈடுபட்டிருந்தன.