.webp)
தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளியான கமாண்டோ சலிந்தவுக்கு தோட்டாக்களை விற்பனை செய்ததாக கூறப்படும் கணேமுல்ல கமாண்டோ ரெஜிமன்ட்டின் சார்ஜன்ட் ஒருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் நேற்று(18) இரவு கைது செய்யப்பட்டார்.
ஒரு தோட்டா 1000 ரூபா வீதம் 350 தோட்டாக்களை 350,000 ரூபாவுக்கு சந்தேகநபர் விற்பனை செய்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்தது.