.webp)
நபர் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டில் அங்குணுகொலபெலஸ்ஸ பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தாக்கப்பட்ட நபர் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த உறுப்பினர் அங்குணுகொலபெலஸ்ஸ பிரதேசத்தில் கழிவுப் பொருட்களை சேகரிக்கும் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
நேற்று(18) பிற்பகல் குறித்த இடத்திற்கு வந்த நபருடன் ஏற்பட்ட முரண்பாட்டின் போது இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.