மியன்மாரில் சைபர் குற்றங்களில் இலங்கையர்கள்..

மியன்மாரில் சைபர் குற்றங்களில் பலவந்தமாக ஈடுபடுத்தப்பட்டுள்ள இலங்கையர்கள்

by Staff Writer 13-09-2025 | 6:58 PM

மியன்மாரில் மேலும் 17 இலங்கையர்கள் சைபர் குற்றங்களில் பலவந்தமாக ஈடுபடுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் தகவல்கள் கிடைத்துள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

சுற்றுலா வீசாவில் தொழிலுக்கு சென்றவர்களே இவ்வாறு சைபர் குற்றங்களில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

மியன்மார் - தாய்லாந்து எல்லையில் அமைந்துள்ள இந்த பகுதிகள் கூகுள் வரைபடத்தில் சைபர் குற்றப் பிரதேசங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

மியன்மாரின் மியாவெட்டி நகரிலிருந்து 25 கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ள குறித்த பகுதிகள் முழுமையாக பயங்கரவாத குழுக்களின் கட்டுப்பாட்டிலேயே உள்ளன.

இதற்கு முன்னரும் குறித்த பகுதியில் சைபர் குற்றங்களில் பலவந்தமாக ஈடுபடுத்தப்பட்ட இலங்கையர்கள் கடும் சிரமத்திற்கு மத்தியில் மீட்கப்பட்டனர்.

கணினித் துறையில் தொழிலைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் குறித்த இளைஞர், யுவதிகள் இவ்வாறு சுற்றுலா வீசாவில் வௌிநாடு சென்றுள்ளமையும் தெரியவந்துள்ளது.