பொரளை துப்பாக்கிச்சூட்டின் துப்பாக்கிதாரி கைது...

பொரளை சஹஸ்புர துப்பாக்கிச்சூட்டுடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி கைது

by Staff Writer 13-09-2025 | 6:57 PM

பொரளை சஹஸ்புர - சிரிசர உயன மைதானத்திற்கு அருகில் அண்மையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டுடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி ஜயவர்தனபுர பொலிஸ் விசேட அதிரடிப்படையின் விசேட சுற்றிவளைப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமன பகுதியில் நேற்று(12)  பகல் 10 கிராம் 710 மில்லிகிராம் ஐஸ் போதைபொருள் மற்றும் மோட்டார் சைக்கிளுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தமன பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட 34 வயதுடைய  சந்தேகநபர் முன்னர் இலங்கை இராணுவத்தில் பணியாற்றியுள்ளதுடன் 2015ஆம் ஆண்டு இராணுவத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கடந்த மாதம் 7 ஆம் திகதி சஹஸ்புர - சிரிசர உயன மைதானத்திற்கு அருகில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்ததுடன், மூவர் காயமடைந்ததும் குறிப்பிடத்தக்கது.