.webp)
குற்றச் செயல்களில் ஈடுபடும் பெகோ சமனின் உதவியாளர் ஒருவர் T81 துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
29 வயதான குறித்த சந்தேகநபர் எம்பிலிபிட்டிய கங்கேயாய பகுதியில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபரிடமிருந்து 2 மெகஸின்கள், 97 தோட்டாக்கள் மற்றும் இராணுவ உடையும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேகநபர் போதைப்பொருள் மற்றும் திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடையவரென சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.