பிரேசில் மு.ஜனாதிபதி பொல்சனாரோவுக்கு சிறைத்தண்டனை

பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதி பொல்சனாரோவுக்கு 27 வருட சிறைத்தண்டனை

by Staff Writer 12-09-2025 | 10:34 PM


இராணுவ சதிப்புரட்சிக்கு சதித்திட்டம் தீட்டிய குற்றச்சாட்டில் பிரேஸிலின் முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் பொல்சொனரோவுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2022 தேர்தலில் தோல்வியடைந்த பின்னர் அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ளும் நோக்கில் சதித்திட்டத்தை முன்னெடுத்ததாக ஜெய்ர் பொல்சொனரோ மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

தேர்தல் முடிவை நிராகரிப்பதற்காக நாட்டில் கொந்தளிப்பான இயக்கத்தைத் தூண்டியதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.

நாட்டின் ஜனாதிபதியாக லூலா டா சில்வா பதவியேற்ற ஒரு வாரத்திற்குப் பின்னர் அதாவது 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் தலைநகரான பிரேசிலியாவில் வன்முறைகள் வலுப்பெற காரணமாக அமைந்தன.

இது குறித்த நீ்ண்ட வழக்கு விசார​ணைகளை தொடர்ந்து இன்று(12) தீர்ப்பு வழங்கப்பட்டதுடன்.

5 நீதியசர்களில் நால்வர், முன்னாள் ஜனாதிபதி குற்றவாளி என தீர்ப்பளித்தனர்.

ஜனநாயக சட்டத்தின் ஆட்சியை வன்முறையில் ஒழிக்க முயற்சித்தமை, அரச சொத்துக்களை சேதப்படுத்திய​மை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் முன்னாள் ஜனாதிபதி குற்றவாளி என 4 நீதியரசர்களும் அறிவித்தனர்.

இந்த தீர்ப்பிற்கு கண்டனம் வௌியிட்டுள்ள அமெரிக்கா உச்சநீதிமன்ற தீர்ப்பு நியாயமற்றது என கூறியுள்ளது.

ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட முதலாவது பிரேசில் முன்னாள் ஜனாதிபதி இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.