.webp)
திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் கமான்டோ சலிந்தவுக்கு துப்பாக்கி ரவைகளை விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள இராணுவ லெப்டினன் கேர்ணல் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
மேல் மாகாண வடக்கு குற்ற விசாரணைப் பிரிவினரால் சந்தேகநபர் நேற்று(11) கைது செய்யப்பட்டார்.
சந்தேகநபரான இராணுவ அதிகாரி மல்லாவி, பாலிநகர் இராணுவ முகாமின் கட்டளை அதிகாரியாக செயற்பட்டுள்ளார்.
அவர் டி 56 ரக துப்பாக்கிக்கான 250 க்கும் அதிக ரவைகளை விற்பனை செய்துள்ளதுடன் அதற்காக 650,000 ரூபாவிற்கு மேற்பட்ட பணம் அவரது வங்கிக் கணக்கில் வைப்பீடு செய்யப்பட்டுள்ளது.
சந்தேகநபரான லெப்டினன் கேர்ணலின் உதவியாளராக கமாண்டோ சலிந்த இராணுவத்தில் செயற்பட்டுள்ளமை வெளிக்கொணரப்பட்டுள்ளது.
தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள வலஸ் கட்டாவிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் வெளிக் கொணரப்பட்ட தகவல்களுக்கு அமையவே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.