போக்குவரத்து பொலிஸாரின் சீருடையில் கமெரா

போக்குவரத்து பொலிஸாருக்கு சீருடைகளில் பொருத்தக்கூடிய கமெராக்களை வழங்க தீர்மானம்

by Staff Writer 11-09-2025 | 10:04 AM

Colombo (News 1st) போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு அவர்களின் சீருடைகளில் பொருத்தக்கூடிய கமெராக்களை வழங்குவதற்கு பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.

போக்குவரத்து குற்றங்களைக் குறைக்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் சில வாரங்களுள் குறித்த கமெராக்களை அனைத்து போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு.வூட்லர் குறிப்பிட்டார்.