.webp)
Colombo (News 1st) முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன எதிர்வரும் 24ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
Zoom ஊடாக சந்தேகநபர் பொல்கஹவெல நீதவான் முன்னிலையில் இன்று(10) ஆஜர்ப்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
பொத்துஹெர பகுதியில் நபரொருவரை கடத்தி கொலை செய்த சம்பவம் தொடர்பான விசாரணைகளையடுத்து குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் நிஷாந்த உலுகேதென்ன அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தார்.
குறித்த கொலை இடம்பெற்றதாகக் கூறப்படும் 2010ஆம் ஆண்டு சந்தேகநபரான நிஷாந்த உலுகேதென்ன கடற்படை புலனாய்வுப் பிரிவின் பிரதானியாக கடமையாற்றியிருந்தார்.
அத்துடன், கடத்தப்பட்ட நபர் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படும் சட்டவிரோத தடுப்பு முகாம் அவரது கண்காணிப்பின் கீழ் செயற்பட்டுள்ளமை பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.