.webp)
கொழும்பு பிராந்தியத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மாஅதிபர் உதித் லியனகே குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டார்.
சிராவஸ்திபுரவின் திபிரிகடவல பகுதியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைகளுக்கு அமைய அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புதையல் தோண்டிய விவகாரத்தில் பிரதிப் பொலிஸ் மாஅதிபரின் மனைவி உள்ளிட்ட 08 பேர் அனுராதபுரம் பொலிஸாரினால் அண்மையில் கைது செய்யப்பட்டனர்.
இது சார்ந்த மேலதிக விசாரணைகள் பொலிஸ் மாஅதிபரின் உத்தரவின் கீழ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் முன்னெடுக்கப்படுகின்றன.
பெலியத்த-திக்வெல்ல வீதியிலுள்ள காணியொன்றை அபகரித்த குற்றச்சாட்டின் கீழ் சந்தேகநபராக பெயரிடப்பட்ட ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.