.webp)
Colombo (News 1st) மேல் மாகாணத்தில் 31 வைத்தியசாலைகளில் இன்று(21) முதல் தொடர் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக நிறைவுகாண் வைத்திய தொழிற்சங்கத்தினரின் ஒன்றிணைந்த பேரவை தெரிவித்துள்ளது.
காலை 8 மணியிலிருந்து பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பிக்கவுள்ளதாக பேரவையின் பிரதம செயலாளர் சானக தர்மவிக்கிரம தெரிவித்துள்ளார்.
மேல் மாகாண சுகாதார சேவை பணிப்பாளர் சிக்கலுக்குள்ளாகும் வகையில் இடமாற்றம் வழங்க முயற்சித்தமையால் இந்த பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
பணிப்பகிஷ்கரிப்பினால் கதிரியக்க பரிசோதனைகள், CT SCAN பரிசோதனைகள், ஆய்வுகூட பரிசோதனைகள், மருந்து விநியோகம் உள்ளிட்ட மருத்துவ சேவைகள் ஸ்தம்பிதமடையும் நிலை ஏற்பட்டுள்ளது.