.webp)
Colombo (News 1st) முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டயனா கமகேவை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று(21) பிடியாணை பிறப்பித்துள்ளது.
குடிவரவு - குடியகல்வு திணைக்கள சட்டத்தை மீறி போலி தகவல்களை முன்வைத்து கடவுச்சீட்டை பெற்றுக்கொண்டமை மற்றும் செல்லுபடியான விசா இன்றி இலங்கையில் தங்கயிருந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது அவர் நீதிமன்றத்தில் ஆஜராகியிருக்கவில்லை.
சந்தேகநபரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறு கொழும்பு பிரதம நீதவான் தனுஜா லக்மாலி ஜயதுங்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.
குடிவரவு - குடியகல்வு திணைக்கள சட்டத்தை மீறி விசா இன்றி நாட்டில் தங்கியிருந்தமை தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் தாக்கல் செய்யப்பட்ட 7 வழக்குகளின் சாட்சி விசாரணைகள் இன்று எடுத்துக்கொள்ளப்படவிருந்தது.
வழக்கின் சாட்சியாளர்களாக குடிவரவு - குடியகல்வு திணைக்களத்தின் நிர்வாகப் பணிப்பாளர் நாயகத்தின் பிரதிநிதி, மேல் நீதிமன்றத்தின் வழக்கு பொருட்களுக்கான அறையின் பொறுப்பதிகாரி மற்றும் வழக்கின் முதல் சாட்சியாளர் ஆகியோர் இன்று நீதிமன்றததில் ஆஜராகயிருந்தனர்.