.webp)
Colombo (News 1st) நியூஸ் ஃபெஸ்ட் மற்றும் NDB இணைந்து முன்னெடுக்கும் மகளிரை வலுப்படுத்தும் 'ஸ்ரீலங்கா வனிதாபிமான 2025' போட்டியின் ஜனரஞ்சக பெண்ணுக்கான விருதை அனுதி குணசேகர சுவீகரித்தார்.
'ஶ்ரீலங்கா வனிதாபிமான 2025' தேசிய போட்டிகளின் விருது வழங்கும் விழா இன்று(20) பிற்பகல் இரத்மலானையில் உள்ள ஸ்டெய்ன் கலையகத்தில் நடைபெற்றது.
நாட்டின் முன்னேற்றத்திற்கு பங்களிப்பு செய்து பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய துணிச்சலான பெண்களை அங்கீகரிப்பதற்காக சிறந்த தளத்தை உருவாக்குகின்ற ஶ்ரீலங்கா வனிதாபிமான 2025 நிகழ்ச்சி...
ஐந்தாவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சி இரத்மலானை ஸ்டெய்ன் கலையகத்தில் இன்று பிற்பகல் ஆரம்பமானது.
நியூஸ் ஃபெஸ்ட் மற்றும் NDB இணைந்து முன்னெடுக்கும் மகளிரை வலுப்படுத்தும் முயற்சி நாடாளவிய ரீதியில் பாரிய செயற்றிட்டமாக ஒரு வருடமாக செயற்படுத்தப்பட்டது.
தலைநகரிலிருந்து வெகுதொலைவில் உள்ள கிராமங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தியதற்காக துணிச்சலான தொழில்முனைவோர் இதற்காக தெரிவு செய்யப்பட்டனர்.
MTV-யின் பிரதம நிறைவேற்று அதிகாரி யசரத் கமல்சிறி நிகழ்வில் உரையாற்றினார்.
நாடளாவிய ரீதியில் உள்ள திறமையான பெண்களில் இருந்து மிகவும் திறமையான பெண்களை தெரிவு செய்வதற்காக நிபுணத்துவம் பெற்ற நடுவர் குழாத்தினர் செயற்பட்டனர்.
மாகாணப் போட்டிகளை கொழும்பு பல்கலைக்கழகத்தின் தகவல் தொழில்நுட்பப் பிரிவின் பிரதானி பேராசிரியர் பிரியங்கா துனுசிங்க உள்ளிட்ட நடுவர்கள் குழாம் செயற்படுத்தப்பட்டது.
நிறுவன மற்றும் தொழில்முறை போட்டியில் நடுவர்களாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் எச்.டி.கருணாரத்ன உள்ளிட்ட குழுவினர் செயற்பட்டனர்.
ஶ்ரீலங்கா வனிதாபிமான 2025-இற்கான இந்த நடுவர் குழாத்தினர் வழங்கிய பங்களிப்பிற்காக இதன்போது கௌரவிக்கப்பட்டனர்.
கலை, இலக்கியம், கல்வி, இளைஞர் தலைமைத்துவம், சமூக சேவைகள், விளையாட்டு, டிஜிட்டல் தொழில்முனைவோர், வளர்ந்து வரும் தொழில்முனைவோர் மற்றும் சிறியளவிலான தொழில்முனைவோர் ஆகிய பிரிவுகளின் கீழ் வனிதாபிமானவிற்கு அழைக்கப்பட்ட பெண்கள் கௌரவிக்கப்பட்டனர்.
மாகாணத்தில் 8 பிரிவுகளின் கீழ் நடைபெற்ற போட்டி பிரிவுகளில் வெற்றி பெற்ற சிறந்த பெண்கள் தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர்.
அவர்களில் 8 பேருக்கு விருது வழங்கப்பட்டது.
இம்முறை வெளிநாடுகளில் பணி புரிந்து அங்கு பெற்றுக்கொண்ட அனுபவத்தை பயன்படுத்தி இந்த நாட்டிற்கு வருகை தந்து சொந்தமாகத் தொழில்களை ஆரம்பித்து நாட்டிற்கு சுமையாக மாறாத உறுதியான பெண்களை அங்கீகரிப்பதன் ஊடாக மற்றொரு விசேட திட்டம் ஆரம்பமானது.
அந்தவகையில் லக்மாலி விதானபத்திரன, S.W.தம்மிகா பிரியதர்ஷனி மற்றும் L.சுதாகரி ஆகிய 0 பெண்களே அங்கீகரிக்கப்பட்டனர்.
இந்த ஆண்டு வனிதாபிமான விருது வழங்கும் விழாவில் மிகவும் ஜனரஞ்சக பெண் விருதுக்கு அனுதி குணசேகர, காஞ்சனா அனுராதி, லோச்சனா ஜயக்கொடி, தரிந்தி பெர்னாண்டோ மற்றும் ஷனுத்ரி பிரியசாத் ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டனர்.
இவர்களில் அனுதி குணசேகர இலங்கையின் ஜனரஞ்சக பெண்ணுக்கான விருதை வென்றார்.