தொடரும் பணிப்பகிஷ்கரிப்பு..

19 கோரிக்கைகளை முன்வைத்து தொடரும் பணிப்பகிஷ்கரிப்பு..

by Staff Writer 19-08-2025 | 4:46 PM

தமது பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதிக்கு இன்று(19) விளக்க அறிக்கையை கையளிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி தெரிவிக்கின்றது.

மேலதிக நேர கொடுப்பனவு மற்றும் கைரேகைப் பதிவு உள்ளிட்ட 19 கோரிக்கைகளை முன்வைத்து ஆரம்பித்த பணிப்பகிஷ்கரிப்பு தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுவதாக அதன் இணை ஏற்பாட்டாளர் சிந்தக பண்டார தெரிவித்தார்.

இந்த பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக சேவைகளை பெறுவதற்காக வரும் மக்கள் பல அசௌகரியங்களை எதிர்நோக்கினர்.

ஐக்கிய தேசிய தபால் ஊழியர் சங்கம், இலங்கை சுதந்திர தபால் மற்றும் தொலைதந்தி பொது ஊழியர் சங்கம், ஐக்கிய தபால் மற்றும் தொலைத்தொடர்பு ஊழியர் சங்கம், இலங்கை சுதந்திர தபால் சேவைகள் சங்கம் மற்றும் இலங்கை தபால் ஊழியர் முன்னணி உள்ளிட்ட 23 தொழிற்சங்கங்கள் இந்த பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளன.

பணிப்பகிஷ்கரிப்பினால் தபால் நிலையங்களில் 15 இலட்சத்திற்கும் அதிகமான கடிதங்கள் குவிந்துள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியின் இணை ஏற்பாட்டாளர் சிந்தக பண்டார தெரிவித்தார்.

தொழிற்சங்க நடவடிக்கைகளை கைவிட்டு கலந்துரையாடலுக்கு வருமாறு தபால் மாஅதிபர் ருவன் சத்குமார தொழிற்சங்கங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.