ஷஷீந்திர ராஜபக்ஸ விளக்கமறியலில்..

முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஷஷீந்திர ராஜபக்ஸ விளக்கமறியலில்..

by Staff Writer 19-08-2025 | 5:08 PM

முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஷஷீந்திர ராஜபக்ஸவை எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் அவரை இன்று(18) முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

மகாவலி அதிகார சபைக்கு சொந்தமான காணியில் அனுமதியின்றி நிர்மாணிக்கப்பட்ட கட்டடம் உள்ளிட்ட சொத்துக்கள் போராட்டத்தின் போது சேதமாக்கப்பட்டதாக தெரிவித்து 88 இலட்சம் ரூபாவிற்கு மேல் நட்டஈடு பெற்றமை தொடர்பாக இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஷஷீந்திர ராஜபக்ஸ கடந்த 06ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.