'நல்லூரில் கதிர்காமம்'விசேட வளாகம் அங்குரார்ப்பணம்

நியூஸ் ஃபெஸ்ட்டின் 'நல்லூரில் கதிர்காமம்' விசேட வளாகம் அங்குரார்ப்பணம்

by Staff Writer 19-08-2025 | 4:52 PM

யாழ்.நல்லூர் கந்தசுவாமி ஆலய பெருந்திருவிழாவை முன்னிட்டு 'நல்லூரில் கதிர்காமம்' நியூஸ் ஃபெஸ்ட்டின் விசேட வளாகம் இன்று(19) காலை அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.

யாழ்.நல்லூர் சிவகுரு ஆதினத்தில் அமைக்கப்பட்டுள்ள நியூஸ் ஃபெஸ்ட்டின் விசேட வளாகம் இன்று(19) முதல் எதிர்வரும் வியாழக்கிழமை வரை செயற்படவுள்ளது.

கெப்பிட்டல் மகாராஜா குழுமத்தின் குழுமப் பணிப்பாளர் ஷெவான் டெனியல், MTV Channel தனியார் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி யசரத் கமல்சிறி, சக்தி TV அலைவரிசை பிரதானி முருகேசு குலேந்திரன், நியூஸ் ஃபெஸ்ட் சந்தைப்படுத்தல் பிரிவின் பொது முகாமையாளர் ரொஷான் வட்டவல, நியூஸ் ஃபெஸ்ட் புதிய ஊடக பணிப்பாளர் கந்தவேள் மயூரன் உள்ளிட்ட பலர் அங்குரார்ப்பண நிகழ்வில் பங்கேற்றனர்.