உலர் மீன் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை..

உலர் மீன் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை..

by Staff Writer 16-08-2025 | 8:10 PM


 

உலக சந்தைக்கு ஏற்ற வகையில் உலர் மீன் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பா, கனடா மற்றும் அவுஸ்திரேலியாவிற்கு உலர் மீன்களை ஏற்றுமதி செய்ய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு தெரிவித்தது.

ஏற்றுமதிக்கான உலர் மீன் உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக நவீன தொழில்நுட்பம், உபகரணங்கள் மற்றும் நிதி வசதிகளை வழங்குவதில் கவனம் செலுத்தப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சு மேலும்  தெரிவித்தது.