.webp)
துருக்கியில் நிலநடுக்கம்
துருக்கியில் 6.1 மெக்னிடியூட் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இதனால் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் 29 பேர் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
துருக்கியின் பலிகேசிரில் உள்ள சிந்திர்கி நகரில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.
நேற்றிரவு(10) சுமார் 7:53 மணியளவில் பூமியில் 11km ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
முதலாவது நிலநடுக்கம் 6.1 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது.
பின்னர் 4.6 ரிக்டர் அளவில் மற்றுமொரு நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இஸ்தான்புல் உள்ளிட்ட பல பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக நாட்டின் பேரிடர் முகாமைத்துவ ஆணைக்குழு தெரிவித்தது.
பலிகேசிர் மாகாணத்தில் 16 கட்டடங்கள் நிலநடுக்கத்தால் சேதமடைந்துள்ளன.