தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை இன்று(10)

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை இன்று(10)

by Staff Writer 10-08-2025 | 6:21 AM

Colombo (News 1st) 2025ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை இன்று(10) நடைபெறவுள்ளது.

2,787 மத்திய நிலையங்களில் 307,951 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்.

தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் அனைத்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக திடீர் அனர்த்தங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்தார்.

திடீர் அனர்த்தங்கள் ஏற்படுமாயின் 117 என்ற துரித இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி தகவல் அளிக்க முடியுமென அவர் குறிப்பிட்டார்.

பரீட்சை நிலைய வளாகத்திற்குள் பரீட்சார்த்திகள், பரீட்சை பணிக்குழுவினர் தவிர்ந்த வேறு எவருக்கும் அனுமதி இல்லை என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.