.webp)
மட்டக்களப்பு - பூம்புகார் பகுதியில் ரி56 ரக துப்பாக்கியும் தோட்டாக்களும் மீட்கப்பட்டுள்ளன.
வீடொன்றுக்கு அருகில் நிர்மாணப் பணிகளுக்காக நிலத்தை தோண்டும் போதே இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் தெரிவித்தனர்.
ரி56 துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் 16 தோட்டாக்கள், 9 மில்லிமீற்றர் வகை துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் 47 ரவைகள் என்பன பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.