தெஹியோவிட்டவில் பஸ் விபத்து ; 42 பேர் காயம்

தெஹியோவிட்டவில் பஸ் விபத்து ; 42 பேர் காயம்

by Staff Writer 02-08-2025 | 6:09 PM

அவிசாவளை - கேகாலை வீதியின் தெஹியோவிட்ட - தெம்பிலியான பகுதியில் பஸ் விபத்திற்குள்ளானதில் 42 பேர் காயமடைந்துள்ளனர்.

சீதாவக்கை கைத்தொழில் பேட்டையில் பணிபுரியும் ஊழியர்களை ஏற்றிச்சென்ற பஸ்ஸே இன்று(02) காலை விபத்திற்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வாகனமொன்றுக்கு இடமளிக்க முற்பட்டபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்கள் அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.