.webp)
336 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை நிறுவும் நடவடிக்கைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சு தெரிவித்தது.
சீதாவாக்கை மற்றும் ஆனமடுவ பிரதேச சபைகளில் கோரம் இன்மையினால் குறித்த சபைகளை ஸ்தாபிக்கும் நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பிரதியமைச்சர் ருவன் செனரத் கூறினார்.
நீதிமன்ற நடவடிக்கை காரணமாக வண்ணாத்திவில்லு பிரதேச சபையின் அதிகாரத்தை நிறுவும் நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அதிக அளவிலான உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி தக்கவைத்துள்ளது.
தேசிய மக்கள் சக்தி 224 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை உறுதிப்படுத்தியுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி 36 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளது.
இலங்கைத் தமிழரசுக் கட்சி 33 உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைத்துள்ளதுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 07 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தைப் பெற்றுள்ளது.
பொதுஜன பெரமுன 06 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை அடைந்துள்ளது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 03 உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைத்துள்ளது.
பொதுஜன ஐக்கிய முன்னணி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியன தலா 2 உள்ளூராட்சி மன்றங்களில் அதிகாரம் பெற்றுள்ளன.
கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 339 உள்ளூராட்சி மன்றங்களுக்கான உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.
குறித்த உள்ளூராட்சி மன்றங்களின் அபிவிருத்தி நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்காக 23,000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டது.