.webp)
Colombo (News 1st) சட்ட மாஅதிபர் திணைக்களத்தின் குற்றப்பிரிவு பிரதானியாக சொலிசிட்டர் ஜெனரல் விராஜ் தயாரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுவரை காலமும் அந்த பதவியிலிருந்த ரொஹாந்த அபேசூரிய மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்திற்காக சொலிசிட்டர் ஜெனரல் விராஜ் தயாரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.