சுவாமி விபுலானந்த அடிகளின் சிரார்த்த தினம்..

சுவாமி விபுலானந்த அடிகளின் 78ஆவது ஆண்டு சிரார்த்த தினம்

by Staff Writer 19-07-2025 | 4:35 PM

உலகின் முதல் தமிழ் பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் 78ஆவது ஆண்டு சிரார்த்த தினம் இன்றாகும்(19).

தமிழ்மொழி வளர்ச்சிக்கு பெரும் தொண்டாற்றிய சுவாமி விபுலானந்தரின் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று(19) பல இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

அடிகளார் 1947 ஆம் ஆண்டு ஜூலை 19 ஆம் திகதி இறையடி சேர்ந்தார்.

இந்நாள் அகில இலங்கை தமிழ்த்தினமாகவும் அவர் ஸ்தாபித்த சிவானந்த வித்தியாலய ஸ்தாபகர் தினமாகவும் நினைவு கூரப்படுகின்றது.

பன்மொழிப் புலவராய், முத்தமிழ் வித்தகராய், பேராசிரியராய், ஆன்மிகத்தில் திளைக்கும் ஞானியாய், மக்கள் தொண்டனாய் பல்வேறு பரிணாமங்களில் சுவாமி விபுலானந்தர் அளப்பரிய சேவையாற்றியுள்ளார்.