குஷ் போதைப்பொருளுடன் டென்மார்க் யுவதி கைது

குஷ் போதைப்பொருளுடன் டென்மார்க் யுவதி கைது

by Staff Writer 17-07-2025 | 9:41 AM

Colombo (News 1st) ஐந்து கிலோகிராமுக்கும் அதிக குஷ் போதைப்பொருளுடன் டென்மார்க் நாட்டைச் சேர்ந்த 23 வயதான யுவதி கைது செய்யப்பட்டுள்ளார்.

சுங்கத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு, கட்டுநாயக்க விமான நிலையத்தில் முன்னெடுத்த சோதனை நடவடிக்கையிலேயே போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.

பயணப்பொதியில் மறைத்து விமான நிலையத்திலிருந்து வௌியேறுவதற்கு முற்பட்ட வேளையிலேயே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைப்பற்றப்பட்ட குஷ் போதைப்பொருளின் பெறுமதி 5 கோடியே 70 இலட்சம் ரூபாவென மதிப்பிடப்பட்டுள்ளது.

தாய்லாந்தின் பேங்கொக்கிலிருந்து சென்னை ஊடாக சந்தேகநபர் நாட்டை வந்தடைந்துள்ளார்.