.webp)
Colombo (News 1st) 15 மில்லியன் டொலர் முதலீட்டில் சர்வதேச தரம் வாய்ந்த ஆய்வகத்தை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
சர்வதேச அங்கீகாரத்துடன் கூடிய ஆய்வுகூடத்தை நிறுவுவதற்காக அமெரிக்க Stemedica மற்றும் இலங்கை உயிரி தொழில்நுட்ப நிறுவனத்திற்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று(15) காலை கைச்சாத்திடப்பட்டது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அமெரிக்காவின் Stemedica சார்பில் அதன் ஸ்தாபகர், பேராசிரியர் Hans Keirstead மற்றும் இலங்கை உயிரி தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைவர், பேராசிரியர் சமித்த ஹெட்டிகே மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி அமாலி ரணசிங்க ஆகியோர் கையெழுத்திட்டனர்.
இலங்கையில் சுகாதாரம், விவசாயம், அழகுசாதனப் பொருட்கள், ஆயுர்வேதம் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் இறக்குமதி , ஏற்றுமதி துறைகளிலும் பரிசோதனை செய்வதற்கு சர்வதேச அங்கீகாரம் பெற்ற ஆய்வகங்களின் திறனை அதிகரிப்பதற்கான நீண்ட கால தேவை காணப்படுகிறது.
நாடளாவிய ரீதியிலுள்ள ஆய்வகங்களுடன் இணைந்து பிரதான ஆய்வகமாக செயற்பட்டு பல்வேறு துறைகளில் பொருட்கள், சேவைகளின் தரத்தை குறித்த ஆய்வகத்தின் ஊடாக உறுதி செய்வதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.