.webp)
கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை மீள்பரிசீலனை செய்வதற்கான விண்ணப்பங்கள் இன்று(14) முதல் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன.
இன்று முதல் எதிர்வரும் 28ஆம் திகதி வரை பரீட்சை பெறுபேறுகளை மீள்பரிசீலனை செய்வதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்தது.
2024 கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் கடந்த 10ஆம் திகதி நள்ளிரவு வௌியிடப்பட்டது.
கடந்த வருடத்திற்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண பரீட்சை கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது.
இதில் 474,147 பரீட்சார்த்திகள் தோற்றியதுடன் 398,182 பேர் பாடசாலை பரீட்சார்த்திகளாவர்.
இம்முறை வௌியாகியுள்ள கல்விப் பொதுத்தராதர சாதாரணப்பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய 237,26 பேர் உயர்தரத்திற்கு தகுதி பெற்றுள்ளனர்.