.webp)
Colombo (News 1st) விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் மஹேஷி விஜேரத்னவின் மகள் இன்று(09) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபரை 05 இலட்சம் ரூபா சரீரப்பிணையில் விடுவித்து கொழும்பு பிரதம நீதவான் தனுஜா லக்மாலி உத்தரவிட்டார்.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளுக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டில் சந்தேகநபர் வாழைத்தோட்டம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
இது தொடர்பான வழக்கு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 27ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
இதேவேளை, ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் மஹேஷி விஜேரத்னவை எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் நேற்று(08) உத்தரவிட்டது.
குறைந்த விலையில் பெற்றுக்கொள்ளும் வசதி இருந்தபோதிலும், தமக்கு சொந்தமான தனியார் நிறுவனத்தின் ஊடாக அதிக விலையில் (EVDs) மற்றும் VP Shunts எனப்படும் நரம்பியல் அறுவைசிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களை நோயாளர்களுக்கு விற்பனை செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ் விசேட வைத்திய நிபுணர் அண்மையில் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.