சிங்கமலை நீர்த்தேக்கத்தில் தவறி வீழ்ந்த மாணவன்

சிங்கமலை நீர்த்தேக்கத்தில் தவறி வீழ்ந்து காணாமல் போன மாணவனின் சடலம் மீட்பு

by Staff Writer 09-07-2025 | 6:49 PM

Colombo (News 1st) ஹட்டன் சிங்கமலை நீர்த்தேக்கத்தில் தவறி வீழ்ந்து காணாமல் போன 17 வயது மாணவன் இன்று(09) பிற்பகல் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நண்பர்கள் சிலருடன் நிழற்படம் எடுப்பதற்காக சென்ற வேளையிலேயே அணைக்கட்டிற்குள் தவறி வீழ்ந்துள்ளார்.

கொட்டகலை கேம்பிரிட்ஜ் கல்லூரியின் தமிழ்மாறன் எனும் மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

ஹட்டன் பொலிஸார், இராணுவம் மற்றும் கடற்படையினர் இணைந்து தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

கல்வி பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றி பெறுபேறுக்காக காத்திருந்த மாணவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.