உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான வௌிக்கொணர்வு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான வௌிக்கொணர்வு

by Chandrasekaram Chandravadani 09-07-2025 | 6:36 PM

Colombo (News 1st) கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மட்டக்களப்பு சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த காலப்பகுதியில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முழுமையாக அறிந்திருந்தமை விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று(09) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றம் தொடர்பில் விளக்கமளித்த ​போதே அமைச்சர் இதனை கூறினார்.